Tâ-Hâ
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[20:1]
தாஹா.
[20:2]
(நபியே!)
நீர் துன்பப்படுவதற்காக
நாம் இந்த குர்ஆனை
உம்மீது இறக்கவில்லை.
[20:3]
(அல்லாஹ்வுக்கு)
அஞ்சுவோருக்கு
நல்லுபதேசமே அன்றி
(வேறில்லை).
[20:4]
பூமியையும், உயர்வான
வானங்களையும்
படைத்தவனிடமிருந்து
அது இறக்கி அருளப் பெற்றது.
[20:5]
அர்ரஹ்மான் அர்ஷின்
மீது அமைந்தான்.
[20:6]
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும்
இடையே உள்ளவையும், மண்ணுக்கு
அடியில் உள்ளவையும்
அவனுக்கே உரியன.
[20:7]
(நபியே!)
நீர் உரக்கச் சொன்னாலும்
நிச்சயமாக அவன்
இரகசியத்தையும்
(அதை விட) மறைவானதையும்
அறிகிறான்.
[20:8]
அல்லாஹ் - அவனைத்
தவிர வணக்கத்திற்குரிய
நாயன் வேறில்லை, அவனுக்கு
அழகிய திரு நாமங்கள்
இருக்கின்றன.
[20:9]
இன்னும் (நபியே!)
மூஸாவின் வரலாறு
உம்மிடம் வந்ததா?
[20:10]
அவர் நெருப்பைக்
கண்டு தம் குடும்பத்தாரிடம்
நீங்கள் (இங்கு
சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக
நான் நெருப்பைக்
கண்டேன்; ஒரு வேளை
அதிலிருந்து உங்களுக்கு
ஓர் எரி கொள்ளியைக்
கொண்டு வரவோ, அல்லது
நாம் செல்ல வேண்டிய
பாதையை அந் நெருப்பி(ன்
உதவியி)னால் கண்டு
பிடிக்கவோ செய்யலாம்" என்று
(கூறினார்).
[20:11]
அவர் (நெருப்பின்)
அருகே வந்த போது "மூஸாவே!" என்று
அழைக்கப் பட்டார்.
[20:12]
நிச்சயமாக நாம்
தான் உம்முடைய
இறைவன், நீர் உம் காலணிகள்
இரண்டையும் கழற்றிவிடும்!
நிச்சயமாக நீர்
'துவா' என்னும்
புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
[20:13]
இன்னும் நாம்
உம்மை (என் தூதராக)த்
தேர்ந்தெடுத்தேன், ஆதலால்
வஹீயின் வாயிலாக (உமக்கு)
அறிவிக்கப் படுவதற்கு
நீர் செவியேற்பீராக.
[20:14]
நிச்சயமாக நாம்
தான் அல்லாஹ்!
என்னைத் தவிர வேறு
நாயன் இல்லை, ஆகவே, என்னையே
நீர் வணங்கும், என்னை
தியானிக்கும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
[20:15]
ஒவ்வோர் ஆத்மாவும்
தான் செய்ததற்குத்
தக்கபடி பிரதிபலன்கள்
அளிக்கப்படும் பொருட்டு
(நியாயத் தீர்ப்புக்குரிய)
வேளை நிச்சயமாக
வரவிருக்கிறது, ஆயினும்
அதை மறைத்து
வைக்க நாடுகிறேன்.
[20:16]
ஆகவே, அதனை நம்பாது, தன் (மன)
இச்சையைப் பின்பற்றுபவன்
திடனாக அதைவிட்டும்
உம்மைத் திருப்பிவிட
வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
[20:17]
மூஸாவே! உம்முடைய
வலது கையில் இருப்பது
என்ன?" (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
[20:18]
(அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி, இதன் மீது
நான் சாய்ந்து
கொள்வேன், இதைக்
கொண்டு என் ஆடுகளுக்கு
இலைகள் பறிப்பேன், இன்னும்
இதில் எனக்கு வேறு
தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்.
[20:19]
அதற்கு (இறைவன்) "மூஸாவே! அதை நீர்
கீழே எறியும்" என்றான்.
[20:20]
அவ்வாறே அவர்
அதனைக் கீழே எறிந்தார், அப்போது
அது ஊர்ந்து செல்லும்
ஒரு பாம்பாயிற்று.
[20:21]
(இறைவன்)
கூறினான்: "அதைப்
பிடியும், பயப்படாதீர்; உடனே நாம்
அதை அதன் பழைய
நிலைக்கே மீட்டுவோம்."
[20:22]
இன்னும், உம் கையை
உம் விலாப்புறமாக
புகுத்தி (வெளியில்)
எடும், அது ஒளி மிக்கதாய்
மாசற்ற வெண்மையாக
வெளிவரும், இது மற்றோர்
அத்தாட்சியாகும்.
[20:23]
(இவ்வாறு)
நம்முடைய பெரிய
அத்தாட்சிகளிலிருந்து
(சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.
[20:24]
ஃபிர்அவ்னிடம்
நீர் செல்வீராக! நிச்சயமாக
அவன் (வரம்பு) மீறி
விட்டான் (என்றும்
அல்லாஹ் கூறினான்).
[20:25]
(அதற்கு
மூஸா) கூறினார்: "இறைவனே!
எனக்காக என் நெஞ்சத்தை
நீ (உறுதிப்படுத்தி)
விரிவாக்கி தருவாயாக!
[20:26]
என் காரியத்தை
எனக்கு நீ எளிதாக்கியும்
வைப்பாயாக!
[20:27]
என் நாவிலுள்ள
(திக்குவாய்) முடிச்சையும்
அவிழ்ப்பாயாக!
[20:28]
என் சொல்லை அவர்கள்
விளங்கிக் கொள்வதற்காக!
[20:29]
என் குடும்பத்திலிருந்து
எனக்கு (உதவி செய்ய)
ஓர் உதவியாளரையும்
ஏற்படுத்தித் தருவாயாக!
[20:30]
என் சகோதரர் ஹாரூனை
(அவ்வாறு ஏற்படுத்தித்
தருவாயாக)!
[20:31]
அவரைக் கொண்டு
என் முதுகை வலுப்படுத்துவாயாக!
[20:32]
என் காரியத்தில்
அவரைக் கூட்டாக்கி
வைப்பாயாக!
[20:33]
நாங்கள் உன்னை
அதிகமதிகம் (தஸ்பீஹு
செய்து) துதிப்பதற்காகவும்,
[20:34]
உன்னை அதிகமதிகம்
நினைவு கூர்வதற்காகவும்
(இவற்றையெல்லாம் அருள்வாயாக!)
[20:35]
நிச்சயமாக, நீ எங்களை
நோக்கியவனாகவே
இருக்கிறாய்" (என்றார்)
[20:36]
மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக
உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன
என்று (அல்லாஹ்)
கூறினான்.
[20:37]
மேலும், முன்னர்
மற்றொரு முறையும்
நிச்சயமாக நாம்
உம்மீது பேரருள்
புரிந்துள்ளோம்.
[20:38]
உம் தாயாருக்கு
அறிவிக்க வேண்டியதை
அறிவித்த நேரத்தை
(நினைவு கூர்வீராக)!
[20:39]
அவரை (குழந்தையை)ப்
பேழையில் வைத்து
(அப்பேழையை நீல்)
நதியில் போட்டுவிடும்; பின்னர்
அந்த நதி அதைக்
கரையிலே கொணர்ந்து
எறிந்து விடும், அங்கே
எனக்கு பகைவனும், அவருக்குப்
பகைவனுமாகிய (ஒரு)வன்
அவரை எடுத்துக்கொள்வான்
(எனப் பணித்தோம்).
மேலும், "(மூஸாவே!)
நீர் என் கண் முன்னே
வளர்க்கப்படுவதற்காக உம் மீது
அன்பைப் பொழிந்தேன்.
[20:40]
(பேழை கண்டெடுக்கப்பட்ட
பின்) உம் சகோதரி
நடந்து வந்து, 'இவரை வளர்க்கும்
பொறுப்பை ஏற்றுக்
கொள்ளக் கூடிய ஒருவரை
உங்களுக்கு நான்
அறிவிக்கட்டுமா?' என்று
கேட்டாள், ஆகவே நாம்
உம் தாயாரிடம், அவருடைய
கண் குளிர்ச்சியடையும்
பொருட்டும், அவர் துக்கம்
அடையாமல் இருக்கும்
பொருட்டும் உம்மை
(அவர்பால்) மீட்டினோம், பின்னர்
நீர் ஒரு மனிதனைக் கொன்று
விட்டீர், அப்பொழுதும்
நாம் உம்மை அக்கவலையிலிருந்து
விடுவித்தோம், மேலும்
உம்மைப் பல சோதனைகளைக்
கொண்டு சோதித்தோம்.
அப்பால் நீர் பல
ஆண்டுகளாக மதியன்
வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே!
பிறகு நீர் (நம்
தூதுக்குரிய) தக்க பருவத்தை
அடைந்தீர்.
[20:41]
இன்னும், "எனக்காகவே
நான் உம்மைத்
(தூதராகத்) தெரிந்தெடுத்துள்ளேன்.
[20:42]
'ஆகவே, நீரும்
உம் சகோதரரும் என்னுடைய
அத்தாட்சிகளுடன்
செல்வீர்களாக!
மேலும் என்னைத்
தியானிப்பதில் (நீங்களிருவரும்)
சளைக்காதீர்கள்.
[20:43]
நீங்கள் இருவரும்
ஃபிர்அவ்னிடம்
செல்லுங்கள்; நிச்சயமாக
அவன் வரம்பு மீறிவிட்டான்.
[20:44]
நீங்கள் இருவரும்
அவனிடம் (சாந்தமாக)
மென்மையான சொல்லால்
சொல்லுங்கள், அதனால், அவன் நல்லுபதேசம்
பெறலாம், அல்லது
அச்சம் கொள்ளலாம்."
[20:45]
எங்கள் இறைவனே!
அவன் எங்களுக்குத்
தீங்கிழைக்கத்
தீவிரப்படவோ அல்லது
வரம்பு மீறவோ செய்யலாம்
என்று நாங்கள்
பயப்படுகிறோம்
என்று (மூஸாவும், ஹாரூனும்)
கூறினார்கள்.
[20:46]
(அதற்கு
அல்லாஹ்) "நீங்களிருவரும்
அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக
நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும்
உங்களிருவருடனும்
இருக்கிறேன்" என்று கூறினான்.
[20:47]
ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம்
சென்று: 'நாங்களிருவரும்
உன்னுடைய இறைவனின்
தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன்
அனுப்பி விடு, மேலும்
அவர்களை வேதனை
படுத்தாதே, திடனாக, நாங்கள்
உன் இறைவனிடமிருந்து
ஓர் அத்தாட்சியை
உனக்குக் கொண்டு
வந்திருக்கிறோம், இன்னும்
எவர் நேர் வழியைப்
பின்பற்றுகிறாரோ
அவர் மீது (சாந்தி)
ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்
(என்று அல்லாஹ்
கட்டளையிட்டான்).
[20:48]
எவன் (நாங்கள்
கொண்டு வந்திருப்பதை)
பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ
அவன் மீது நிச்சயமாக
வேதனை ஏற்படும்
என எங்களுக்கு
உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது
(என்று நீங்கள்
இருவரும் அவனுக்குக்
கூறுங்கள்).
[20:49]
(இதற்கு
ஃபிர்அவ்ன்) "மூஸாவே!
உங்களிருவருடைய
இறைவன் யார்?" என்று
கேட்டான்.
[20:50]
ஒவ்வொரு பொருளுக்கும்
அதற்கான அமைப்பை
வழங்கி பின்னர்
வழிகாட்டியிருக்கிறனே
அவன்தான் எங்கள்
இறைவன் என்று கூறினார்.
[20:51]
அப்படியென்றால்
முன் சென்ற தலைமுறைகளின்
நிலைமை என்ன? என்று
கேட்டான்.
[20:52]
இது பற்றிய அறிவு
என்னுடைய இறைவனிடம்
(பதிவுப்) புத்தகத்தில்
இருக்கிறது என்
இறைவன் தவறுவதுமில்லை மறப்பதுமில்லை
என்று (மூஸா பதில்)
சொன்னார்.
[20:53]
(அவனே)
உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக
அமைத்தான்; இன்னும்
அதில் உங்களுக்குப்
பாதைகளை இலேசாக்கினான்; மேலும்
வானத்திலிருந்து
நீரையும் இறக்கினான்; இம் மழை
நீரைக் கொண்டு
நாம் பல விதமான
தாவர வர்க்கங்களை
ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்
(என்று இறைவன்
கூறுகிறான்).
[20:54]
(அவற்றிலிருந்து)
நீங்களும் புசித்து
உங்கள் கால்நடைகளையும்
மேய விடுங்கள்; நிச்சயமாக
இதில் அறிவுடையோருக்குத்
(தக்க) அத்தாட்சிகள்
இருக்கின்றன.
[20:55]
இப் பூமியிலிருந்து
நாம் உங்களைப்
படைத்தோம்; அதனுள்ளேயே
நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை
இரண்டாம் முறையாகவும்
வெளிப்படுத்துவோம்.
[20:56]
நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம்
ஃபிர்அவ்னுக்குக்
காண்பித்தோம்; ஆனால்
அவன் (அவற்றையெல்லாம்)
பொய்யெனக் கூறி, நம்பிக்கை
கொள்ள மறுத்து
விட்டான்;
[20:57]
மூஸாவே! நீர் உம்
சூனியத்தைக் கொண்டு, எங்களை
எங்கள் நாட்டை
விட்டு வெளியேற்றுவதற்காகவா
நம்மிடம் வந்தீர்? என்று
கூறினான்.
[20:58]
அவ்வாறாயின்
இதைப் போன்ற சூனியத்தை
நாங்களும் உமக்குத்
திடனாகச் செய்து
காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ
அல்லது நீரோ மாற்றம்
செய்ய முடியாதபடி நமக்கும்
உமக்குமிடையே
ஒரு வார்த்தைப்
பாட்டை (எல்லோருக்கும்
வந்து காணக் கூடிய) ஒரு சரியான
தலத்தில் ஏற்படுத்தும்
(என்றான்).
[20:59]
யவ்முஜ் ஸீனத்" (பண்டிகை
நாளே) உங்களுடைய
தவணையாகவும், மக்கள்
யாவரும் ஒன்று
சேரப்பெறும் ளுஹா
(முற் பகல்) நேரமும்
ஆக இருக்கட்டும்" என்று சொன்னார்.
[20:60]
அவ்வாறே ஃபிர்அவ்ன்
திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான)
சூழ்ச்சிக்காரர்களை
ஒன்று திரட்டிக்
கொண்டு, மீ;ண்டும் வந்தான்.
[20:61]
(அப்பொழுது)
மூஸா சூனியக் காரர்களிடம் "உங்களுக்குக்
கேடுதான்! அல்லாஹ்வின்
மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு
செய்தால்) அவன்
வேதனையினால் உங்களை
அழித்து விடுவான்; எவன் பொய்யை
இட்டுக் கட்டுகிறானோ, திடனாக
அவன் (நற்பேறு
கெட்டு) அழிந்து விட்டான்" என்று
கூறினார்.
[20:62]
சூனியக்காரர்கள்
தமக்குள்ளே தங்கள்
காரியத்தைக் குறித்து(த்
தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை)
இரகசிய ஆலோசனையாகவும்
வைத்துக் கொண்டனர்.
[20:63]
(சூனியக்காரர்கள்
மக்களை நோக்கி;) "நிச்சயமாக
இவ்விருவரும்
சூனியக்காரர்களே!
தம்மிருவருடைய சூனியத்தைக்
கொண்டு உங்களை
உங்களுடைய நாட்டை
விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய
(மார்க்கப்) பாதையைப்
போக்கிவிடவுமே
இவ்விருவரும்
விரும்புகிறார்கள்.
[20:64]
ஆகவே உங்கள் திட்டத்தை
ஒரு சேரத்
தீர்மானித்துக்
கொண்டு அணி அணியாக
வாருங்கள்; இன்றைய
தினம் எவருடைய
(கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக
அவர்தாம் வெற்றியடைவார்
(என்றுங் கூறினார்).
[20:65]
மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில்
நாங்கள் முதலாவதாக
இருக்கட்டுமா? என்று
(சூனியக்காரர்)
கேட்டனர்.
[20:66]
அதற்கவர்; "அவ்வாறன்று! நீங்களே
(முதலில்) எறியுங்கள்" என்று
(மூஸா) கூறினார்.
(அவர்கள் எறியவே) அவர்களுடைய
கயிறுகளும் அவர்களுடைய
தடிகளும் அவர்கள்
சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக
நெளிந்தோடுவது
போல் அவருக்குத்
தோன்றியது.
[20:67]
அப்போது, மூஸா தம்
மனதில் அச்சம்
கொண்டார்.
[20:68]
(மூஸாவே!)
நீர் பயப்படாதீர்! நிச்சயமாக
நீர் தாம் மேலோங்கி
நிற்பீர்! என்று
நாம் சொன்னோம்.
[20:69]
இன்னும், உம் வலது
கையில் இருப்பதை
நீர் கீழே எறியும்; அவர்கள்
செய்த (சூனியங்கள்
யா)வற்றையும் அது விழுங்கி
விடும்; அவர்கள் செய்தது
சூனியக்காரனின்
சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன்
எங்கு சென்றாலும்
வெற்றி பெற மாட்டான்
(என்றும் கூறினோம்).
[20:70]
(மூஸா வெற்றி
பெற்றதும்) சூனியக்காரர்கள்
ஸுஜூது செய்தவர்களாக
வீழ்த்தப்பட்டு
- "ஹாரூனுடைய மூஸாவுடைய
இறைவன் மீதே நாங்கள்
ஈமான் கொள்கிறோம்" என்று
கூறினார்கள்.
[20:71]
நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே
நீங்கள் அவர் மேல்
ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக
அவர் உங்களுக்குச்
சூனியத்தைக் கற்றுக்
கொடுத்த தலைவர்
(போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை
மாறு கை, மாறு கால்
வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில்
உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும்
வேதனை கொடுப்பதில்
நம்மில் கடுமையானவர்
யார், அதில் நிலையாக
இருப்பவரும் யார்
என்பதை நிச்சயமாக
நீங்கள் அறிந்து
கொள்வீர்கள் என்று (ஃபிர்அவ்ன்)
கூறினான்.
[20:72]
(மனந்திருந்திய
அவர்கள் ஃபிர்அவ்னிடம்) "எங்களுக்கு
வந்துள்ள தெளிவான
அத்தாட்சிகளை
விடவும், எங்களைப்
படைத்தவனை விடவும்
உன்னை (மேலானவனாக)
நாங்கள் எடுத்துக்
கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன
தீர்ப்புச் செய்ய
நீ இருக்கிறாயோ
அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச்
செய்வதெல்லாம்
இவ்வுலக வாழ்க்கையில்
தான்" என்று கூறினார்.
[20:73]
எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப்
படுத்தினால் (நாங்கள்
செய்ய நேர்ந்த)
சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக
எங்கள் இறைவன்
மீது நிச்சயமாக
நாங்கள் ஈமான்
கொண்டோம்; மேலும், அல்லாஹ்
தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்)
நிலைத்திருப்பவனாகவும்
இருக்கின்றான் (என்று
கூறினார்கள்).
[20:74]
நிச்சயமாக எவன்
தன் இறைவனிடத்தில்
குற்றவாளியாக
வருகிறானோ, அவனுக்கு
நரகம் நிச்சயமாக
இருக்கிறது. அதில்
அவன் மரிக்கவும்
மாட்டான். வாழவும்
மாட்டான்.
[20:75]
ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான
(நல்ல) செயல்களைச்
செய்தவர்களாக
அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான
பதவிகள் உண்டு.
[20:76]
(அத்தகையவர்க்கு)
என்றென்றும் நிலைத்திருக்கும்
சுவனபதிகள் உண்டு
அவற்றின் கீழே
ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில்
அவர் என்றென்றும்
வசிப்பர் இதுவே
(பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின்
(நற்) கூலியாகும்.
[20:77]
இன்னும்; "நீர் என் அடியார்களுடன்
இரவோடிரவாகப்
பயணம் செய்து, அவர்களுக்காக
கடலில் உலர்ந்த
பாதையை உண்டாக்கிக்
கொள்வீராக! (ஃபிர்அவ்ன்
உம்மைப்) பிடித்துவிடுவான்
என்று பயப்படாமலும், (கடலில்
மூழ்கி விடுவோம்
என்று) அஞ்சாமலும்
இருப்பீராக!" என்று
மூஸாவுக்கு நாம்
திட்டமாக வஹீ அறிவித்தோம்.
[20:78]
மேலும் ஃபிர்அவ்ன்
தன் சேனைகளுடன்
அவர்களைப் பின்
தொடர்ந்தான்; ஆனால்
கடல் அவர்களை முற்றாக
மூழ்கடித்து விட்டது.
[20:79]
ஃபிர்அவ்ன் தன்
சமூகத்தாரை வழி கெடுத்தான்; நேரான
பாதையை (அவர்களுக்குக்)
காட்டவுமில்லை.
[20:80]
இஸ்ராயீலின்
சந்ததியினரே! நாம்
திட்டமாக உங்களை
உங்கள் பகைவனிடமிருந்து
இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய்)
மலையின்) வலப்பக்கத்தில் நாம்
(தவ்ராத் வேதத்தை
அருள்வதாக) உங்களுக்கு
வாக்குறுதியளித்தோம்; இன்னும் 'மன்னு
ஸல்வாவை' (உணவாக)
உங்கள் மீது நாம்
இறக்கி வைத்தோம்.
[20:81]
நாம் உங்களுக்கு
அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து
உண்ணுங்கள்; (அதற்கு
நன்றி செலுத்தாமல்)
அழிச்சாட்டியம்
செய்யாதீர்கள்; (அப்படி
செய்வீர்களானால்)
உங்கள் மீது என்
கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது
என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக
வீழ்வான்.
[20:82]
எவன் பாவமன்னிப்புத்
தேடி ஈமான்
கொண்டு நற்செயல்களையும்
செய்து அப்பால்
நேர்வழியும் அடைகிறானோ
அவனுக்கு நிச்சயமாக
நான் மிகவும் மன்னிப்பவனாக
இருக்கின்றேன்
(என்று கூறினோம்).
[20:83]
மூஸாவே! உம் சமூகத்தாரை
விட்டு உம்மை
இவ்வளவு சீக்கிரம்
விரைந்து வரச்செய்தது
யாது? (என்று தூர்
ஸினாய் மலைக்கு அவர்கள்
வந்த போது அல்லாஹ்
கேட்டான்.)
[20:84]
(அதற்கவர்) "அவர்களும் என் அடிச்சுவட்டின்
மீதே வருகின்றனர்; இன்னும்
(என்) இறைவனே! நீ
என்னைப் பற்றித்திருப்திப்
படுவதற்காக, நான் உன்னிடத்தில்
விரைந்து வந்தேன்" என்று கூறினான்.
[20:85]
நிச்சயமாக, (நீர் இங்கு
வந்த) பின்னர்
உம்முடைய சமூகத்தாரைச்
சோதித்தோம்; இன்னும்
அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து
விட்டான் என்று
(அல்லாஹ்) கூறினான்.
[20:86]
ஆகவே, மூஸா கோபமும்
விசனமும் கொண்டவராய்த்
தம் சமூகத்தாரிடம்
திரும்பி வந்து "என்னுடைய
சமூகத்தவர்களே! உங்கள்
இறைவன் உங்களுக்கு
ஓர் அழகிய வாக்குறுதி
கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க்
காலம்) அதிகமாகி
விட்டதா? அல்லது
உங்கள் மீது உங்கள்
இறைவனுடைய கோபம் இறங்க
வேண்டுமென்று
விரும்பி நீங்கள்
எனக்குக் கொடுத்த
வாக்குறுதிக்கு
மாறு செய்தீர்களா?" (என்றார்).
[20:87]
உங்களுக்குக்
கொடுத்திருந்த வாக்குறுதிக்கு
எங்கள் சக்தியைக்
கொண்டு நாங்கள்
மாறு செய்யவில்லை
ஆனால் நாங்கள் சமூகத்தாரின்
அலங்கார (ஆபரண)ங்
களிலிருந்து சில
சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள்
அவற்றை(க் கழற்றி
நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே
ஸாமிரியும் எறிந்தான்
என்று அவர்கள்
கூறினார்கள்.
[20:88]
பின்னர் அவன்
அவர்களுக்காக
ஒரு காளைக்கன்றை
(உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு
மாட்டின் சப்தமும்
இருந்தது. (இதைக்
கண்ட) சிலர் "இது தான்
உங்களுடைய நாயன்; இன்னும்
(இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால்
அவர் இதை மறந்து
விட்டார்" என்று
சொன்னார்கள்.
[20:89]
அவர்களுக்கு
அது மறுபடி எதுவும்
சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக
நன்மையையோ, தீமையையோ
செய்யச் சக்தியற்றது
என்பதையும் அவர்கள்
பார்க்க வில்லையா?
[20:90]
இதற்கு முன்னரே
ஹாரூன் அவர்களை நோக்கி, "என் சமூகத்தாரே!
நிச்சயமாக இதைக்
கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக
உங்களுடைய இறைவன்
'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப்
பின்பற்றுங்கள்.
இன்னும் என் கட்டளைக்குக்
கீழ்ப்படியுங்கள்" என்று
கூறினார்.
[20:91]
மூஸா எங்களிடம்
திரும்பி வரும் வரையில், நாங்கள்
இதன் ஆராதனையை
நிறுத்த மாட்டோம்
என்று அவர்கள்
கூறினர்.
[20:92]
(மூஸா திரும்பியதும்
தம் சகோதரரிடம்) "ஹாரூனே!
இவர்கள் வழி கெடுகிறார்கள்
என்று நீங்கள்
கண்ட போது (அவர்களுக்கு
போதனை செய்து திருத்துவதில்
நின்றும்) உங்களைத்
தடை செய்தது யாது? என்று
கேட்டார்.
[20:93]
நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க
வேண்டாமா? (அவ்வாறு
செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள்
என் கட்டளையை
மீறினீர்களா?
[20:94]
(இதற்கு
ஹாரூன்;) "என் தாயின்
மகனே! என் தாடியையோ
என் தலை (முடி)யையோ
பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே
நீங்கள் பிரிவினையை
உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள்
காத்திருக்கவில்லை!' என்று
நீர் கூறுவீரோ
என நிச்சயமாக நான்
அஞ்சினேன்" என்று
கூறினார்.
[20:95]
ஸாமிரிய்யே! உன்
விஷயமென்ன? என்று
மூஸா அவனிடம் கேட்டார்.
[20:96]
அவர்கள் காணாத
ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த
தூதர் காலடியிலிருந்து
ஒரு பிடி (மண்ணாகப்)
பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம்
(செய்வதை) என் மனம்
எனக்கு அழகா(ன
செயலா)க ஆக்கிற்று
என (ஸாமிரீ
பதில்) சொன்னான்.
[20:97]
நீ இங்கிருந்து
போய் விடு நிச்சயமாக
இந்த வாழ்க்கையில்
(எவரைக் கண்டாலும், என்னைத்)
தீண்டாதீர்கள்" என்று
சொல்(லித் திரி)வது
தான் உனக்குள்ளது, (மறுமையில்)
நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட
வேதனையும் உண்டு
அதை விட்டும் நீ
தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு
ஆராதனை செய்து
கொண்டிருந்தாயே
அந்த "நாயனைப்" பார்; நிச்சயமாக
அதனைச் சுட்டெரித்துப்
பின்னர் (சாம்பலாக்கி)
அதைக் கடலில் பரத்திவிடுவோம்" என்றார்.
[20:98]
உங்களுடைய நாயன்
அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத்
தவிர (வணக்கத்திற்குரிய)
நாயன் வேறில்லை
எல்லாப் பொருட்களிலும்
ஞானத்தால் விசாலமானவன்
என்றும் கூறினார்.
[20:99]
(நபியே!)
இவ்வாறே முன் சென்று போனவர்களின்
வரலாற்றை நாம்
உமக்குக் கூறுகிறோம்; மேலும்
திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும்
நல்லுபதேசத்தை
(இத்திருக் குர்ஆனை)
நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
[20:100]
எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, அவன் கியாம
நாளில் (பாவச்)
சுமையைச் சுமப்பான்.
[20:101]
அ(ப்படிச் சுமப்ப)வர்கள்
அதில் எந்நாளும்
(அதைச் சுமந்தவாறே)
இருப்பார்கள்; கியாம
நாளில் இச்சுமை
அவர்களுக்கு மிகவும்
கெட்டது.
[20:102]
ஸூர் (எக்காளம்)
ஊதப்படும் நாள் அது
குற்றவாளிகளை, (பயத்தினால்)
நீலம் பூத்த கண்ணுடையோராக்
நாம் அந்நாளில் ஒன்று
சேர்ப்போம்.
[20:103]
நீங்கள் பத்து
(நாட்களு)க்கு மேல்
(பூமியில்) தங்கியதில்லை
என்று அவர்கள்
தங்களுக்கிடையில்
இரகசியம் பேசிக் கொள்வார்கள்.
[20:104]
ஒரு நாளேயன்றி
(அதிகமாக) நீங்கள்
தங்கவில்லை என்று
அவர்களில் நல்வழியில்
சென்றவர்கள் கூறுவதையும்
நாம் நன்கறிவோம்.
[20:105]
(நபியே!)
இன்னும் உம்மிடம் மலைகளைப்பற்றி
அவர்கள் கேட்கிறார்கள். "அவைகளை
என் இறைவன் தூள்
தூளாக்கி (மணல்களைப்
போல் பரப்பி)விடுவான்" என்று
நீர் கூறுவீராக.
[20:106]
பின்பு, அவற்றைச்
சமவெளியாக்கி
விடுவான்.
[20:107]
அதில் நீர் மேடு
பள்ளத்தை காணமாட்டீர்."
[20:108]
அந்நாளில் அவர்கள்
(ஸூர் மூலம்)
அழைப்பவரையே பின்பற்றிச்
செல்வார்கள்; அதில்
எத்தகைய கோணலும்
இருக்காது இன்னும்
(அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு
(அஞ்சி) எல்லாச்
சப்தங்களும் ஒடுங்கி
விடும். கால்கள்
(மெதுவாக அடியெடுத்து
வைக்கும்) சப்தத்தைத்
தவிர (வேறெதையும்)
நீர் கேட்கமாட்டீர்.
[20:109]
அந்நாளில் அர்ரஹ்மான்
எவரை அனுமதித்து, எவருடைய
பேச்சை உவந்து
கொள்கிறானோ, அவர்களைத்
தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும்
(பரிந்துரையும்)
பலனளிக்காது.
[20:110]
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப்
பின்னால் இருப்பதையும்
அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள்
அதை(த் தங்கள்)
கல்வியறிவு கொண்டு
சூழ்ந்தறிய மாட்டார்கள்.
[20:111]
இன்னும், நிலைத்தவனாகிய நித்திய
ஜீவனான (அல்லாஹ்வுக்கு)
யாவருடைய முகங்களும்
பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச்
சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி
விடுவான்.
[20:112]
எவர் முஃமினாக
இருந்து, ஸாலிஹான
நற்செயல்களைச்
செய்கிறாரோ அவர்
தமக்கு அநியாயம்
செய்யப்படுமென்றோ, (தமக்குரிய)
நற்கூலி குறைந்துவிடுமென்றோ
பயப்படமாட்டார்கள்.
[20:113]
மேலும், இவ்விதமாகவே
இந்த குர்ஆனை
அரபி மொழியில்
நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள்
பயபக்தியுடையவர்களாக
ஆகும் பொருட்டு, அல்லது
நல்லுபதேசத்தை
அவர்களுக்கு நினைவூட்டும்
பொருட்டு, இதில் அவர்களுக்கு
எச்சரிக்கையை
விவரித்திருக்கின்றோம்.
[20:114]
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே
மிக உயர்ந்தவன்; இன்னும்
(நபியே!) உமக்கு
(குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு
அது முடிவதற்கு
முன்னதாகவே குர்ஆனை
ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா!
கல்வி ஞானத்தை
எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும்
நீர் பிரார்த்தனை
செய்வீராக!
[20:115]
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக
கட்டளையிட்டிருந்தோம்; ஆனால்
(அதனை) அவர் மறந்து
விட்டார் (அக்கட்டளைபடி
நடக்கும்) உறுதிப்பாட்டை
நாம் அவரிடம் காணவில்லை.
[20:116]
நீங்கள் ஆதமுக்கு
ஸுஜூது செய்யுங்கள்
என்று நாம் வானவர்களிடம்
கூறிய போது, இப்லீஸை
தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்.
அவன் (அவ்வாறு
செய்யாது) விலகிக்
கொண்டான்.
[20:117]
அப்பொழுது "ஆதமே! நிச்சயமாக
இவன் உமக்கும், உம்முடைய
மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும்
இச்சுவனபதியிலிருந்து
திட்டமாக வெளியேற்ற
(இடந்) தரவேண்டாம்; இன்றேல்
நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
[20:118]
நிச்சயமாக நீர்
இ(ச் சுவர்க்கத்)தில்
பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.
[20:119]
இன்னும் இதில்
நீர் தாகிக்கவும், வெயிளில்
(கஷ்டப்)படவும்
மாட்டீர் (என்று கூறினோம்).
[20:120]
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்)
குழப்பத்தையும்
உண்டாக்கி "ஆதமே!
நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத
அரசாங்கத்தையும்
உமக்கு நான் அறிவித்துத்
தரவா?" என்று கேட்டான்.
[20:121]
பின்னர் (இப்லீஸின்
ஆசை வார்த்தைப்படி)
அவ்விருவரும்
அ(ம் மரத்)தினின்று
புசித்தனர் உடனே
அவ்விருவரின் வெட்கத்
தலங்களும் வெளியாயின
ஆகவே அவ்விருவரும்
சுவர்க்கத்துச்
சோலையின் இலையைக் கொண்டு
அவற்றை மறைத்துக்
கொள்ளலானார்கள்; இவ்வாறு
ஆதம் தம்முடைய
இறைவனுக்கு மாறு செய்து, அதனால்
வழி பிசகி விட்டார்.
[20:122]
பின்னர் அவரது
இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து
அவரை மன்னித்து
நேர்வழியும் காட்டினான்.
[20:123]
இதிலிருந்து
நீங்கள் இருவரும்
சேகரமாக இங்கிருந்து
வெளியேறி விடுங்கள்.
உங்க(ள் சந்ததிக)ளில்
சிலருக்குச் சிலர்
பகைவர்களாகவேயிருப்பார்கள்; அப்பொழுது
நிச்சயமாக என்னிடமிருந்து
உங்களுக்கு நேர்வழி
வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப்
பின் பற்றி நடக்கிறாரோ
அவர் வழி தவறவும்
மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
[20:124]
எவன் என்னுடைய
உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக
அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே
இருக்கும்; மேலும், நாம் அவனை
கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" என்று
கூறினான்.
[20:125]
(அப்போது
அவன்) "என் இறைவனே!
நான் பார்வையுடையவனாக
இருந்தேனே! என்னை
ஏன் குருடனாக எழுப்பினாய்?" என்று
கூறுவான்.
[20:126]
(அதற்கு
இறைவன்,) "இவ்விதம்தான்
இருக்கும்; நம்முடைய
வசனங்கள் உன்னிடம்
வந்தன அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே
இன்றைய தினம் நீயும்
மறக்கப்பட்டு
விட்டாய்" என்று கூறுவான்.
[20:127]
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின்
மேல் நம்பிக்கை
கொள்ளாமல், வரம்பு
மீறி நடக்கின்றானோ
அவனுக்கு இவ்வாறுதான்
நாம் கூலி கொடுப்போம்; மேலும்
மறுமையின் வேதனை
மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
[20:128]
இவர்களுக்கு
முன் நாம் எத்தனையோ
தலைமுறையினரை
அழித்திருக்கிறோம்
என்பது அவர்களுக்கு(ப்
படிப்பினையைத் தந்து)
நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து
போன) அவர்கள் குடியிருந்த
இடங்களில் தானே இவர்கள்
நடக்கிறார்கள்; நிச்சயமாக
அதில் அறிவுடையோருக்கு
அத்தாட்சிகள் உள்ளன.
[20:129]
உமது இறைவனிடமிருந்து
ஒரு வாக்கும்
(தண்டனைக்கான)
குறிப்பிட்ட ஒரு
தவணையும் முந்திரா
விட்டால் அது
(வேதனை) ஏற்பட்டு
இருக்கும்.
[20:130]
ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்)
நீர் பொறுத்துக்
கொள்வீராக இன்னும்
சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு
முன்னும், இரவின்
நேரங்களிலும்
உம்முடைய இறைவனின் புகழைத்
துதித்துத் தொழுவீராக
மேலும் இன்னும்
பகலின் (இரு) முனைகளிலும்
இவ்வாறே துதி செய்து
தொழுவீராக இதனால்
(நன்மைகளடைந்து)
நீர் திருப்தி
பெறலாம்.
[20:131]
இன்னும், அவர்களில்
சில பிரிவினர்
இன்பமனுபவிக்க
நாம் கொடுத்திருக்கும்
(வாழ்க்கை வசதிகளின்)
பக்கம் உமது கண்களை
நீட்டாதீர்; (இவையெல்லாம்)
அவர்களைச் சோதிப்பதற்காகவே
நாம் கொடுத்துள்ள
உலக வாழ்க்கையின்
அலங்காரங்களாகும்.
உமது இறைவன் (மறுமையில்
உமக்கு) வழங்கவிருப்பது
சிறந்ததும் நிலையானதும்
ஆகும்.
[20:132]
(நபியே!)
உம் குடும்பத்தினரைத் தொழுது
வருமாறு நீர் ஏவுவீராக!
(தொழுகையின் மீது)
நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக!
நாம் உம்மிடம்
உணவு கேட்கவில்லை
ஆனால் உமக்கு உணவை
நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச்
சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத்
தான்.
[20:133]
தம் இறைவனிடமிருந்து
ஓர் அத்தாட்சியை
ஏன் அவர் நம்மிடம்
கொண்டு வரவில்லை? என்று
(நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய
வேதங்களில் உள்ள
தெளிவான அத்தாட்சிகள்
அவர்களுக்கு வரவில்லையா?
[20:134]
இன்னும் (நம் தூதர்)
வருவதற்கு முன், நாம் இவர்களை
வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், "எங்கள்
இறைவா! நீ எங்களுக்கு
ஒரு தூதரை அனுப்பியிருக்க
வேண்டாமா? அவ்வாறாயின்
நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும்
முன் உன் வசனங்களைப்
பின்பற்றியிருப்போமே" என்று
கூறுவார்கள்.
[20:135]
(நபியே! "இறுதி
நாளை) அனைவரும்
எதிர்பார்த்திருப்பார்களே!
ஆகவே நீங்களும்
எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை
உடையவர் யார்? நேர் வழி
அடைந்து விட்டவர்கள்
யார்? என்பதையும்
திடமாக நீங்கள்
அறிந்து கொள்வீர்கள்" என்று
நீர் கூறுவீராக.